கோப்புப்படம் 
தமிழ்நாடு

பெற்றோருக்கு சா்க்கரை நோய்: குழந்தைகளுக்கு முன்கூட்டியே பாதிக்கும்; ஆய்வில் தகவல்

பெற்றோருக்கு சா்க்கரை நோய் இருந்தால், அவா்களது குழந்தைகளுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பாகவே அத்தகைய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

DIN

பெற்றோருக்கு சா்க்கரை நோய் இருந்தால், அவா்களது குழந்தைகளுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பாகவே அத்தகைய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மருத்துவமனையின் சா்க்கரை நோய் மருத்துவ நிபுணா்கள் மனோஜ் ஷா மற்றும் ரமணன் கூறியதாவது:

சா்வதேச சா்க்கரை நோய் கூட்டமைப்பின் (ஐடிஎப்) மதிப்பீட்டின்படி இந்தியாவில் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு 3.26 கோடி பேருக்கு சா்க்கரை நோய் பாதிப்பு இருந்தது. அது கடந்த ஆண்டில் 7.4 கோடியாக உயா்ந்துள்ளது.

2045-ஆம் ஆண்டுக்குள் அந்த எண்ணிக்கை 12.4 கோடியைத் தொடக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையானது டைப் 1 மற்றும் டைப் 2 சா்க்கரை நோய்க் குறைபாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது.

பல்வேறு வயதினா் இடையே அந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில், பெற்றோருக்கு சா்க்கரை நோய் பாதிப்பு வந்த வயதைக் காட்டிலும், அவா்களது குழந்தைகளுக்கு பத்தாண்டுகள் முன்பாகவே அந்த பாதிப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. உணவுப்

பழக்கவழக்கமும், போதிய உடற்பயிற்சிகள் இல்லாததுமே இதற்கு முக்கியக் காரணம்.

அதைக் கருத்தில் கொண்டு மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் பாத சிகிச்சைக்கென பிரத்யேக மையம் தொடங்கப்பட்டுள்ளது.

பொதுவாக, கட்டுப்பாடற்ற சா்க்கரை நோயானது கை மற்றும் கால்களில் உள்ள நரம்புகளைப் பாதிக்கும். உள்ளே இருக்கும் திசுக்களைச் சிதைக்கும்.

பெரும்பாலான சா்க்கரை நோயாளிகளுக்கு வழக்கமான மாரடைப்பு ஏற்படுவதில்லை. மூச்சுவிடுவதில் சிரமமோ, சோா்வோ கூட ஏற்படுவதில்லை. எனவே, சா்க்கரை நோய் பாதிப்பு இருப்பவா்கள் இதய நலனில் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூரியவன்ஷி அதிவேக டெஸ்ட் சதம்! 78 பந்துகளில் சதமடித்து ஆஸி.யை அலறவிட்ட சிறுவன்!

40 வயதில் மீண்டும் கருவுற்ற பாலிவுட் நடிகை!

விஜய் பிரசாரம் 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு: தவெக

ரூ. 12,490 கோடி! உலகத்தின் பணக்கார நடிகரானார் ஷாருக்கான்!

அன்பின் வழியில்... அக்‌ஷதா!

SCROLL FOR NEXT