வேலூரில் பேருந்து மோதி சாய்ந்த சிக்னல் கம்பம்: போக்குவரத்து பாதிப்பு
வேலூர் சிஎம்சி மருத்துவமனை அருகே இன்று அதிகாலை பேருந்து மோதி சிக்னல் கம்பம் சாய்ந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழ்நாடுவேலூரில் பேருந்து மோதி சாய்ந்த சிக்னல் கம்பம்: போக்குவரத்து பாதிப்பு
வேலூர் சிஎம்சி மருத்துவமனை அருகே இன்று அதிகாலை பேருந்து மோதி சிக்னல் கம்பம் சாய்ந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேலூர் சிஎம்சி மருத்துவமனை அருகே இன்று அதிகாலை பேருந்து மோதி சிக்னல் கம்பம் சாய்ந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆற்காட்டில் இருந்து வேலூர் பழைய பேருந்து நிலையம் நோக்கி வந்த தனியார் பேருந்து ஒன்று இன்று அதிகாலை சிஎம்சி அருகே வரும்போது எதிர்பாராத விதமாக சாலையின் நடுவே இருந்த சிக்னல் கம்பத்தின் மீது மோதியுள்ளது.
இதில் சிக்னல் கம்பம் முழுவதுமாக உடைந்து சாலையில் சாய்ந்துள்ளது. மின் கம்பிகளோடு சிக்னல் கம்பம் சாலையில் சாய்ந்ததால் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து விரைந்து வந்த மின் ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் சாலையின் நடுவே இருந்த சிக்னல் கம்பத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.
இவ்விபத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. முதற்கட்ட விசாரணையில் பேருந்து ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.