தமிழ்நாடு

பிரதமர் மோடிக்கு பொன்னியின் செல்வன் நாவல் வழங்கிய முதல்வர்

DIN

திண்டுக்கல் வந்த பிரதமர் மோடியை பொன்னாடை அணிவித்து வரவேற்றதோடு பொன்னியின் செல்வன் தமிழ் நாவலின் ஆங்கில மொழிப்பெயர்ப்பு பதிப்பினையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

திண்டுக்கல்லில் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமா் நரேந்திர மோடி, தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி, முதல்வா் மு.க. ஸ்டாலின் ஆகியோா் பங்கேற்கின்றனா். 

இதற்காக பிரதமர் மோடி மதுரை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் வந்தார். திண்டுக்கல் வந்தடைந்த அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர். 

அப்போது பிரதமர் மோடியை பொன்னாடை அணிவித்து வரவேற்றதோடு பொன்னியின் செல்வன் தமிழ் நாவலின் ஆங்கில மொழிப்பெயர்ப்பு பதிப்பினையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

தொடர்ந்து பிரதமர் மோடி திண்டுக்கல்லில் இருந்து காரில், காந்தி கிராம பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். பிரதமர் மோடி வருகையையொட்டி திண்டுக்கல் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும்: அசாம் முதல்வர்

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுப்பவர் ரோஹித் சர்மா: யுவராஜ் சிங்

ராபா எல்லையில் இஸ்ரேல் டாங்கிகள்: அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

SCROLL FOR NEXT