படம்: சித்தாந்த் விர் சூர்யவன்சி இன்ஸ்டாகிராம் 
தமிழ்நாடு

ஜிம்மில் உடற்பயிற்சியின்போது சுருண்டு விழுந்து டிவி நடிகர் பலி

மும்பையில் உடற்பயிற்சியின்போது டிவி நடிகர் ஒருவர் திடீரென சுருண்டு விழுந்து பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DIN

மும்பையில் உடற்பயிற்சியின்போது டிவி நடிகர் ஒருவர் திடீரென சுருண்டு விழுந்து பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியில் பல்வேறு தொடர்களில் நடித்திருப்பவர் சித்தாந்த் விர் சூர்யவன்சி(46). இவர் மும்பையில் உள்ள ஜிம் ஒன்றில் இன்று உடற்பயிற்சியில்
ஈடுபட்டுகொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் சுருண்டு மயங்கி விழுந்தார். 

உடனடியாக அவரை மீட்டு அந்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பலியானார்.

அவரது மறைவு பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த டிவி நடிகருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

அரையிறுதிக்கு முன்னேறப் போவது யார்? தெ.ஆப்பிரிக்காவை சந்திக்கும் மேற்கிந்தியத் தீவுகள்!

தேவை கட்டாய வெற்றி; இன்று ஜிம்பாப்வேயுடன் களமாடும் இந்தியா!

ஓய்வறியாப் போராளிக்குப் பிரியாவிடை!

வேளாண் அறிவியல் நிலையத்தில் ரிசா்வ் வங்கி அதிகாரி ஆய்வு

SCROLL FOR NEXT