முகப்பு
தமிழ்நாடு

கோவையில் தொடர் மழை: ராஜவாய்க்கால் தடுப்பணை திறப்பு

கோவையில் இரவு முழுவதும் பெய்த தொடர் மழை காரணமாக ராஜ வாய்க்கால் தடுப்பணை திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:49 AM
பகிர்:

கோவை: கோவையில் இரவு முழுவதும் பெய்த தொடர் மழை காரணமாக ராஜ வாய்க்கால் தடுப்பணை திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டம் முழுவதும் நேற்று மாலை முதல் துவங்கி இன்று அதிகாலை வரை தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் நகரின் முக்கியப் பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

குறிப்பாக கோவை மாநகரில் உள்ள 8 குளங்களிலும் நீர் நிறைந்துள்ள நிலையில் நொய்யல் ஆற்று வழியாக செங்குளம் வந்து அங்கிருந்து ராஜ வாய்க்கால் வழியாக குறிச்சி குளத்துக்கு நீர் செல்லும் தடுப்பணையும் திறந்து விடப்பட்டது.

இதனால் வழக்கமான அளவை விட ராஜா வாய்க்காலில் கூடுதல் நீர் வெளியேற்றப்பட்டது.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மாநகராட்சி ராஜவாய்க்காலில் இருந்த குப்பைகளை அகற்றியதால் இடையூறின்றி நீர் வெளியேறி வருகிறது. 

வழக்கமாக மழை பெய்தால் ராஜ வாய்க்காலில் நீர் திறந்து விடும்போது அருகே உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் சென்ற நிலையில் தற்போது சீரான முறையில் நீர் வெளியேறி வருகிறது.

ராஜவாய்க்காலில் நீர் திறப்பட்டதால் புட்டுவிக்கி தடுப்பணையிலும் நீர் ஆர்பரித்து ஓடியது. 

முழு கட்டுரையைப் படிக்க →