கோப்புப்படம் 
தமிழ்நாடு

சீர்காழி அருகே வாய்க்காலில் தவறி விழுந்து சிறுமி பலி: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!

மயிலாடுதுறை மாவட்டத்தில் வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

DIN


மயிலாடுதுறை மாவட்டத்தில் வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம் எருக்கூர் கிராமம் வடக்கு தெருவில் வசித்து வருபவர் ராமன். இவரது மகள் அக்ஷிதா(5) ஞாயிற்றுக்கிழமை மாலை(நவ.13) தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது அருகில் இருந்த பெரிய வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்துவிட்டார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். 

உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். 

உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்குமாறு உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

SCROLL FOR NEXT