தமிழ்நாடு

மழைநீர் தேங்கவில்லை என திமுக அரசு மாய தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறது: எடப்பாடி பழனிசாமி

மழைநீர் தேங்கவில்லை என திமுக அரசு மாய தோற்றத்தை ஏற்படுத்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

DIN

மழைநீர் தேங்கவில்லை என திமுக அரசு மாய தோற்றத்தை ஏற்படுத்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த பிறகு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நான் மழையை வைத்து அரசியல் செய்கிறேன் என்றால் மு.க.ஸ்டாலின் செய்தது என்ன?. மழைநீர் தேங்கவில்லை என திமுக அரசு மாய தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. திமுக ஆட்சிக்காலத்தில் எந்தவித பணிகளும் நடைபெறவில்லை. 

அதிமுக ஆட்சிக்காலத்தில் பெறப்பட்ட நிதியை தான் தற்போது பயன்படுத்தி வருகின்றனர். சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்பதால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். சென்னையில் சொட்டு நீர் கூட தேங்கவில்லை என திமுக வெளியிடும் செய்தி உண்மைக்கு புறம்பானது. மக்களால் வீட்டை விட்டு வெளியேற முடியவில்லை. 

திமுக ஆட்சியில் படகில் தான் மக்கள் செல்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ முகாம்கள் கூட அமைக்கப்படவில்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் சென்ற மலைப்பாம்பை கையில் பிடித்த நபர்! திடீரென கடித்ததால் பரபரப்பு!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

SCROLL FOR NEXT