தமிழ்நாடு

பாலாற்றில் வெள்ளம்: ஆபத்தை உணராமல் தரைப்பாலத்தில் பயணம் செய்யும் மக்கள்!

தமிழக ஆந்திர எல்லைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பாலாறு மற்றும் கிளை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

DIN

தமிழக ஆந்திர எல்லைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பாலாறு மற்றும் கிளை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தை வெள்ளநீர் மூழ்கடித்துச் செல்வதால் ஆம்பூர் பகுதியிலிருந்து குடியாத்தம், மேல்பட்டி, ரெட்டிமாங்குப்பம், கீழ்பட்டி, வளத்தூர், செம்பேடு உள்பட சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் செல்லும் பேருந்துகள் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. 

இதனால் அப்பகுதியிலிருந்து தொழிற்சாலைகளுக்கு பல்வேறு பணிகளுக்குச் செல்லும் தொழிலாளர்கள், பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் வெள்ளத்தில் மூழ்கியுள்ள தரைப்பாலத்தில் பயணம் மேற்கொள்ளத் தடை விதித்து காவல்துறையினர் தரைப் பாலத்தின் இரு புறத்திலும் தடுப்புகள் அமைத்துப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் நிலையிலும் வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல் பயணம் செய்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT