முகப்பு
தமிழ்நாடு

வரும் 17-ம் தேதி முதல் சபரிமலைக்கு சிறப்பு பேருந்து சேவை: போக்குவரத்துத் துறை அறிவிப்பு

சபரிமலை செல்வோரின் வசதிக்காக சென்னை - பம்பை இடையே நவம்பர் 17 ஆம் தேதி முதல் சிறப்பு விரைவு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்துறை அறிவித்துள்ளது. 

Updated On : 14 நவம்பர், 2022 at 5:08 PM
கோப்புப் படம்.
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:20 PM

சபரிமலை செல்வோரின் வசதிக்காக சென்னை - பம்பை இடையே நவம்பர் 17 ஆம் தேதி முதல் சிறப்பு விரைவு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்துறை அறிவித்துள்ளது. 

பண்டிகை காலங்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. 

அதன்படி, சபரிமலை செல்வோரின் வசதிக்காக சென்னை-பம்பை-குமளி இடையே வரும் 17 ஆம் தேதி முதல் சிறப்பு விரைவு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத் துறை தெரிவித்துள்ளது. 

அதன் கட்டண விவரங்களையும் போக்குவரத்துறை அறிவித்துள்ளது. 

சென்னையில் இருந்து பம்பைக்கு பெரியவர் ஒருவருக்கு ரூ.1090, சிறியவர்களுக்கு ரூ.545 என கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இந்த சேவை வரும் 2023 ஜனவரி 18 ஆம் தேதி வரை வழங்கப்பட இருப்பதாக போக்குவரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.