நூலகங்களை புதுப்பிக்க ரூ. 84 கோடி நிதி: அரசாணை வெளியீடு!
தமிழகம் முழுவதும் 3,808 நூலகங்களை சீரமைக்க ரூ.84 கோடி நிதி ஒதுக்கி அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடுநூலகங்களை புதுப்பிக்க ரூ. 84 கோடி நிதி: அரசாணை வெளியீடு!
தமிழகம் முழுவதும் 3,808 நூலகங்களை சீரமைக்க ரூ.84 கோடி நிதி ஒதுக்கி அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 3,808 நூலகங்களை சீரமைக்க ரூ.84 கோடி நிதி ஒதுக்கி அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதுமுள்ள 3,808 நூலகங்களை சீரமைக்கவும், நூலகங்களுக்குத் தேவையான புதிய புத்தகங்கள், தளவாடப் பொருட்கள் வாங்கவும் ரூ.84 கோடி நிதி வழங்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. முதல் கட்டமாக 2021-22 ஆம் ஆண்டில் 4,116 நூலகங்களை சீரமைக்க ரூ.91.75 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் நடப்பு ஆண்டில் 3,808 நூலகங்களை சீரமைத்து புதுப்பிக்க ரூ.84.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.
மீதமுள்ள நூலகங்கள் 2024 ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கப்படும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | காத்திருக்கின்றன மோர்பியில் மரித்தவர்களின் ஆன்மாக்கள்!