தமிழ்நாடு

காட்பாடியில் ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம்

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் இன்று துவங்கியது. ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர்.

DIN

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் இன்று துவங்கியது. ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர்.

இந்திய ராணுவத்தில் பணிபுரிய ஆள் சேர்க்கும் முகாம், வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று துவங்கியது. இந்த முகாம் இன்று முதல் வரும் வரும் 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
 
இந்த முகாமில் இணையதளம் மூலம் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். சிப்பாய், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு ஆள் சேர்ப்புக்காக இந்த முகாம் நடைபெறுகிறது.

மேலும், பெண் ராணுவக் காவலர்களுக்கான முகாமும் இங்கே நடைபெறுகிறது. இந்த முகாமில் நாளொன்றுக்கு சுமார் 3000 பேர் பங்கேற்கின்றனர்.

ராணுவ வீரர் பணிகளுக்கு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட 11 வட மாவட்டங்களை சேர்ந்தவர்களும், மற்ற பணிகளுக்கு தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்கலாம்.

இந்த முகாம் நடைபெறுவதை ஒட்டி பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செல்ஃபி கேர்ள்... ஜான்வி கபூர்!

ராணுவ முகாமில் இருந்து வெளியேறினார் நேபாள முன்னாள் பிரதமர்!

இந்த வார ஓடிடி படங்கள்!

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்!

ஹோட்டல் வருவாய் ரூ.50; ஆனால், ஊழியர்களுக்கு சம்பளம் ரூ.15 லட்சம்! கங்கனா ஆதங்கம்!

SCROLL FOR NEXT