தமிழ்நாடு

நவ. 20 முதல் தமிழகத்தில் மீண்டும் மழை! வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி விரைவில் உருவாக வாய்ப்புள்ளதாகவும், நவம்பர் 20 முதல் தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஐஎம்டி தெரிவித்துள்ளது.

DIN

சென்னை: வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி விரைவில் உருவாக வாய்ப்புள்ளதாகவும், நவம்பர் 20 முதல் தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், சூறாவளி சுழற்சி ஒன்று தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையின் மூலம் அறிவித்துள்ளது.

இதனால், அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் படிப்படியாக காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது.

இதனால், நவம்பர் 20ஆம் தேதி முதல் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவம்பர் 16ஆம் தேதி காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையத்தில் (12 செ.மீ.), தென்காசி மாவட்டத்தில் ஆயக்குடி மற்றும் சிவகிரி பகுதியில் (9 மற்றும் 7 செ.மீ.) பலத்த மழை பெய்ததுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்பிஐ வங்கியில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

திமுகவுக்கு கண்டனம், கூட்டணி அதிகாரம், தேர்தலில் போட்டி - தவெக தீர்மானங்கள்!

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

SCROLL FOR NEXT