தமிழ்நாடு

மீனவர்களை மீட்கக்கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

DIN

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அடிக்கடி சிறையிலடைக்கப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும், சேதப்படுத்தப்படுவதும், மீன்பிடித் தொழிலை முழுமையாக நம்பியிருக்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளது.

இந்தியத் தரப்பிலிருந்து பலமுறை வேண்டுகோள் விடுக்கப்பட்ட பின்னரும், மீனவர்கள் சிறைபிடிக்கப்படும் சம்பவங்கள் தொடர்கிறது. தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 100 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது இலங்கை வசம் உள்ளன. 

இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. பாக் வளைகுடா பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை இலங்கை கடற்படை தொடர்ந்து மீறும் செயல் இந்தியாவுக்கு ஒரு சவால் போல காணப்படுகிறது.

இது தொடர்பாகத் தேவையான தூதரக நிலை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் அவர்களின் மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சியாமளாதேவி அம்மன் கோயில் கட்டுமானப் பணிகள் தீவிரம்

அா்ஜுனன் தபசு மரம் ஏறும் விழா

கேரளம்: கடும் வெயிலால் இருவா் உயிரிழப்பு

கோடை வெப்பத்தை சமாளிக்க நடவடிக்கைகள்: ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

இறுதிக்கு வந்தது மோகன் பகான்

SCROLL FOR NEXT