கோப்புப் படம் 
தமிழ்நாடு

திருவாரூர் மாவட்டத்துக்கு டிச.5-ல் உள்ளூர் விடுமுறை!

முத்துப்பேட்டை கந்தூரி விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு டிசம்பர் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN


முத்துப்பேட்டை கந்தூரி விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு டிசம்பர் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்ய டிசம்பர் 10ஆம் தேதி பணி நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்புவான் ஓடை தர்கா கந்தூரி விழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். 

இந்த விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறும். குறிப்பாக இந்த விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு நிகழ்வுக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வருகைதருவார்கள்.

இதற்காக அரசு சார்பில் டிசம்பர் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை ஈடு செய்ய டிசம்பர் 10ஆம் தேதி பணி நாளாக அறிவித்து ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT