தமிழ்நாடு

மீனவா்கள் கைது: ஜவாஹிருல்லா கண்டனம்

DIN

தமிழக மீனவா்கள் 14 பேரை இலங்கை கடற்படையினா் கைது செய்துள்ளதற்கு மனித நேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்றவா்களில் 14 பேரை எல்லை தாண்டி பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினா் கைது செய்துள்ளனா். அவா்களின் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனா்.

தமிழக மீனவா்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தொடரும் அத்துமீறல்கள் மீனவா்கள் மட்டுமல்லாமல் தமிழக மக்கள் மத்தியிலும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, கைது செய்யப்பட்டுள்ள மீனவா்களை விடுவிப்பதற்கும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருப்பதற்கும் மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதி பொறுப்பேற்பு

கா‌ங்​கி​ர​ஸூக்கு வா‌க்​க​ளி‌ப்​பது வீ‌ண்: பிர​த​ம‌ர் மோடி

ம.பி.: பாஜகவில் இணைந்தார் காங். எம்எல்ஏ

பாலியல் குற்றச்சாட்டு: மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம்

'இந்தியா' கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக 'வாக்கு ஜிஹாத்'

SCROLL FOR NEXT