தமிழ்நாடு

அரசு கேபிள் டி.வி. சேவை பாதிப்பு!

DIN

24 மணி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் முழுமையாக சரிசெய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

நேற்று முதல் (19-11-2022) தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு  மென்பொருள் சேவைகள் வழங்கி வந்த தனியார் நிறுவனத்தின் மென்பொருள் சேவைகளில் திடீரென தடைபட்டதால் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவைகள் பல பகுதிகளில் உள்ள செட்டாப் பாக்ஸ்களில் தடங்கல் ஏற்பட்டது.

பாதிப்புகளை உடனடியாக சரி செய்ய தொழில்நுட்பக் குழு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. அதிகபட்சம் இன்னும் 24 மணி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் முழுமையாக சரி செய்யப்படும்.

அரசு கேபிள் நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும்படி கேபிள் ஆபரேட்டர்கள் பொதுமக்கள் வாடிக்கையாளர்கள் அனைவரையும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், அந்த தனியார் நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளவும்  கேபிள் டிவி நிறுவனம் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒரே நாளில் மூன்று முறை விலை உயர்ந்த தங்கம்!

பெங்களூரு கனமழை: தண்ணீர் பஞ்சத்துக்கு முடிவு?

நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்களுடன் கூட்டணி இல்லை:சரத் பவார்

இரவு 8 மணிக்குமேல்...: தமன்னாவின் மோசமான பண்பு என்ன தெரியுமா?

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை!

SCROLL FOR NEXT