ஒளவை நடராஜன் (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

ஒளவை நடராஜன் காலமானார்

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தமிழறிஞர் ஒளவை நடராஜன் சென்னையில் இன்று (நவ.21) மாலை காலமானார். அவருக்கு வயது 85.

DIN

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தமிழறிஞர் ஒளவை நடராஜன் சென்னையில் திங்கள் கிழமை இன்று (நவ.21) மாலை காலமானார். அவருக்கு வயது 85.

ஏற்கெனவே கடந்த 2010ஆம் ஆண்டு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்ததால், மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். தற்போது மீண்டும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று  உயிரிழந்தார்.

தமிழறிஞர் ஒளவை நடராஜன், 1992ஆம் ஆண்டு முதல் 1995ஆம் ஆண்டு வரை தஞ்சை தமிழ்ப் பல்கழகத்தின் துணை வேந்தராக இருந்துள்ளார். 

மதுரையிலுள்ள தியாகராசர் கல்லூரி, தஞ்சாவூரிலுள்ள மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி ஆகியவற்றில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

தில்லியிலுள்ள அகில இந்திய வானொலி நிலையத்தில் செய்தி வாசிப்பாளராகவும் அறிவிப்பாளராகவும் ஔவை நடராசன் பணியாற்றியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வலுவடைந்த புயல் சின்னம்! சென்னையில் மழைக்கு வாய்ப்பு!

சீனாவில் புதின், கிம் ஜாக் உன்! அமெரிக்காவுக்கு எதிரான சதி என டிரம்ப் குற்றச்சாட்டு!

தொடரும் வரதட்சணை கொடுமை: பெங்களூரில் ஒரே வாரத்தில் 2வது தற்கொலை!

உண்மை ஒன்றுதான்

தமிழ்நாட்டுத் தேர்தல்கள்

SCROLL FOR NEXT