முகப்பு
தமிழ்நாடு

சென்னை உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. 

தமிழ்நாடு

சென்னை உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:54 AM
பகிர்:

சென்னை உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில், 

சென்னைக்கு 420கி.மீ அருகே காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் நிலை கொண்டுள்ளது. 

வடதமிழகம் நோக்கி நகரும் காற்றழுத்தத்தாழ்வு மண்டலம், நாளை காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கும். 

இதன்காரணமாக, இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கணித்துள்ளது. 

திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிப்பு

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

அதிகபட்ச வெப்பநிலை 30டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

முழு கட்டுரையைப் படிக்க →