முகப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
தமிழ்நாடு

கால்வாயில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் நிதியுதவி!

மதுரையில் கால்வாயில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:54 AM
முதல்வர் மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
பகிர்:

மதுரையில் கால்வாயில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். 

மதுரை, காமராஜபுரம், பாரதியார் தெருவைச் சேர்ந்த யோ.முத்துலட்சுமியின் கணவர் யோகேஸ்வரன் கடந்த நவம்பர் 13 ஆம் தேதி அன்று அழகர்கோவில் சாலை கள்ளந்திரியில் உள்ள முல்லைப் பெரியாறு கால்வாயில் எதிர்பாராதவிதமாக மூழ்கி உயிரிழந்தார். 

இந்நிலையில் இந்த செய்தி கேட்டு வருத்தமுற்றதாகவும் உயிரிழந்த யோகேஸ்வரனின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும்,  உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இரண்டு லட்ச ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →