தமிழ்நாடு

சிவசங்கர் பாபா: உத்தரவை திரும்பப் பெற்றது உயர்நீதிமன்றம்

DIN

சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் திரும்பப் பெற்றது.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி பள்ளியின் நிறுவனா் சிவசங்கா் பாபா, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கடந்த ஆண்டு புகாா்கள் அளிக்கப்பட்டன. இந்த புகாா்களின் அடிப்படையில் சிவசங்கா் பாபாவுக்கு எதிராக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 

கடந்த 2010-ஆம் ஆண்டு பள்ளி மாணவரின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சிவசங்கா் பாபா சென்னை உயா் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தாா்.

இம்மனுவை விசாரித்த நீதிபதி மஞ்சுளா சிவசங்கா் பாபாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து அண்மையில் உத்தரவிட்டாா்.

இதனிடையே வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்பப் பெறக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனுத் தாக்கல் செய்திருந்தனர். 
சிபிசிஐடியின் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்த உத்தரவை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளம்: ஹாஸ்டல் கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

SCROLL FOR NEXT