தமிழ்நாடு

திருச்சி விமான நிலையத்தில் சோதனை: 15 கிலோ தங்கம் பறிமுதல்

DIN

திருச்சி: வெளிநாடுகளில் இருந்து ஏழு விமானங்களில் வந்த 35 பயணிகளிடம் சுமார் 15 கிலோ தங்கம், திருச்சி விமான நிலையத்தில் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சியில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, துபை, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு சர்வதேச விமான போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

திங்கள் கிழமை இரவு சிங்கப்பூர், மலேசியா, துபை, சார்ஜா நாடுகளில் இருந்து வந்த மொத்தம் 7 சர்வதேச விமானங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் திருச்சி வந்தனர். 

வெளிநாடுகளிலிருந்து அதிக அளவில் தங்கம் கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் பெயரிலும், சந்தேகத்தின் அடிப்படையிலும் அனைத்து பயணிகளிடமும் சுங்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதில், சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த 35 பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் பிரத்தியேகமாக வைத்து தீவிர சோதனை மேற்கொண்டதில் அவர்களிடம் சுமார் 15 கிலோ தங்கம் இருந்து தெரியவந்துள்ளது.

அனைத்து விமானங்கள் மற்றும் பயணிகளிடம் நடைபெற்ற இந்த சோதனை திங்கள் இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை பகலிலும் தொடர்ந்து வருகிறது. 

இதுவரை மொத்தம் 15 கிலோ தங்கம், பயணிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  அதில், பயணிகள் உரிய வரி செலுத்தி வாங்கி செல்லும் தங்கமும் அடக்கம். எனவே, கடத்தல் தங்கம் பறிமுதல் குறித்த விவரம் இன்று மாலை தெரிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோவை விமான நிலையத்தில் நடைபெற்ற சோதனையில், வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டதன், தொடர்ச்சியாக திருச்சி சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT