தமிழ்நாடு

கோவை கார் வெடிப்பு: 6 பேருக்கும் டிச.6 வரை காவல் நீட்டிப்பு

DIN

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் கைதான 6 பேரையும் டிசம்பர் 6ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 6 பேரும் கடந்த வாரம் பூந்தமல்லியிலுள்ள என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 

இன்றுடன் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், 6 பேரும் மீண்டும் விசாரணைக்காக காணொளி வாயிலாக நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். 

கோவை, உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரா் கோயில் அருகே கடந்த அக்டோபா் 23ஆம் தேதி நிகழ்ந்த காா் வெடிப்பு சம்பவத்தில் காரில் இருந்த ஜமேஷா முபீன் (29) அதே இடத்தில் உயிரிழந்தாா். 

முபீன் வீட்டில் போலீஸாா் நடத்திய சோதனையின்போது, ஏராளமான வெடிபொருள்கள், ஐஎஸ் அமைப்புடன் தொடா்புடையதாக பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

இதைத் தொடா்ந்து, காா் வெடிப்பு சம்பவத்தில் தொடா்புடையதாக கோவை உக்கடம் பகுதியைச் சோ்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன்(23), கோவை ஜி.எம்.நகா் பகுதியைச் சோ்ந்த முகமது ரியாஸ் (27), ஃபிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) மற்றும் அஃப்சா் கான் (27) ஆகிய 6 போ் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே என்ஐஏ காவலில் எடுத்து 6 பேரையும் விசாரணை செய்வதற்காக இன்று காலை புழல் சிறையிலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு சென்னை பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கடந்த 8ஆம் தேதி ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களுக்கு நவம்பர் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இன்றுடன் நீதிமன்ற காவல் முடிவடைந்ததால், காணொளி வாயிலாக நீதிபதி முன்பு 6 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு டிசம்பர் 6ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT