தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் தமிழறிஞருமான அவ்வை நடராசன் அவர்கள் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின். 
தமிழ்நாடு

அவ்வை நடராசனுக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி: மு.க. ஸ்டாலின்

தமிழறிஞர் அவ்வை நடராசன் அவர்களுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

DIN

சென்னை: தமிழறிஞர் அவ்வை நடராசன் அவர்களுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மூத்த தமிழறிஞர் அவ்வை நடராசன் (87) அவர்கள் அகவை மூப்பின் காரணமாக இயற்கை எய்தியதை அடுத்து அன்னாரின் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்

பெருந்தகை அவ்வை நடராசன் அவர்களின் தமிழ்ப் பணிகளை கெளரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், செம்மொழி நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவருமான மூத்த தமிழறிஞா் அவ்வை நடராசன் (86) உடல்நலக் குறைவு, வயது மூப்பு காரணமாக சென்னையில் திங்கள்கிழமை காலமானாா்.

கடந்த சில நாள்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவா், சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் திங்கள்கிழமை மாலை காலமானாா்.

அவ்வை நடராசன் பெயரில் சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அறக்கட்டளை நிறுவப்பெற்று ஆண்டுதோறும் அவரது மேடைத் தமிழ் தொடா்பான உரைநிகழ்வுகள் நடைபெறுகின்றன. அவ்வை நடராசன் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி அமைத்த ஐம்பெருங்குழுவின் உறுப்பினா் ஆவாா். அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ஜொ்மனி, சிங்கப்பூா், மலேசியா, இலங்கை, ரோம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ளாா்.

குடும்பம்: தமிழறிஞா் அவ்வை நடராசனின் மனைவியும் குழந்தை நல மருத்துவருமான தாரா நடராசன் 2020-ஆம் ஆண்டு காலமானாா். அவ்வை நடராசன்- தாரா நடராசன் தம்பதிக்கு தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ந.அருள், மருத்துவா் கண்ணன் (ஆஸ்திரேலியா) மருத்துவா் பரதன் (தென்னாப்பிரிக்கா) ஆகிய மூன்று மகன்கள் உள்ளனா்.

இறுதிச் சடங்குகள்: மறைந்த அவ்வை நடராசனின் இறுதிச் சடங்குகள் சென்னை மயிலாப்பூரில் செவ்வாய்க்கிழமை (நவ.22) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சீனிப் பழமே... அபர்ணா தாஸ்!

விமர்சிக்கப்படும் சாய் அபயங்கர் டூட் பாடல்!

பிரதமர் மோடியுடன் உக்ரைன் அதிபர் உரையாடல்!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தலைமையகம் மீது தாக்குதல்: 3 பேர் கைது

யேமன் மீதான இஸ்ரேலின் தாக்குதலில்.. ஹவுதி அரசின் பிரதமர் கொலை!

SCROLL FOR NEXT