முகப்பு
தமிழ்நாடு

42-வதுநாளாக 120 அடியில் நீடிக்கும் மேட்டூர் அணை நீர்மட்டம்

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று காலை வினாடிக்கு 10,400 கன அடியாக சரிந்தது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:54 AM
42-வதுநாளாக 120 அடியில் நீடிக்கும் மேட்டூர் அணை நீர்மட்டம்
பகிர்:

மேட்டூர்: காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று காலை வினாடிக்கு 10,400 கன அடியாக சரிந்தது. 

இன்று காலை இரண்டாவது நாளாக வினாடிக்கு 10,400 கன அடியாக நீடித்து வருகிறது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டம் 42-வது நாளாக 120 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக உள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →