முகப்பு
தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

அடுத்த 3 மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:54 AM
கோப்புப்படம்
பகிர்:

அடுத்த 3 மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக(பகல் 12.30 வரை) அயனாவரம், கும்மிடிப்பூண்டி, பெரம்பூர், புரசைவாக்கம், திருவள்ளூர், தண்டையார்பேட்டை, ஊத்துக்கோட்டை, அம்பத்தூர், மாதவரம், திருவொற்றியூர், பொன்னேரி பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 8 மணி நிலவரப்படி ஆறு மணி நேரத்தில் வலுவிழக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னைக்கு தென்கிழக்கே 130 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணி நேரத்தில் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும்.

இது மெல்ல மேற்கு- வட மேற்கு திசையில் தெற்கு ஆந்திரா  - வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →