நடிகர் விஜய் (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

நடிகர் விஜய்க்கு ரூ.500 அபாராதம்! ஏன் தெரியுமா?

நடிகர் விஜய்க்கு சென்னை போக்குவரத்து காவல் துறையினர் ரூ.500 அபராதம் விதித்துள்ளனர். 

DIN

நடிகர் விஜய்க்கு சென்னை போக்குவரத்து காவல் துறையினர் ரூ.500 அபராதம் விதித்துள்ளனர். 

போக்குவரத்து விதிகளை மீறி தனது கார் கண்ணாடியின் முன்பக்கத்தில், கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டியதால் நடிகர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய், பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் ரசிகர்களைச் சந்தித்தார். விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஏராளமான நற்பணிகளைச் செய்தவர்களையும், தேர்தல்களில் வெற்றி பெற்றவர்களையும் சந்தித்துப் பேசினார். 

இதில் நாமக்கல், சேலம், புதுக்கோட்டை ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்தச் சந்திப்பின்போது, ரசிகர்கள் விஜய் உடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

பனையூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகர் விஜய் வந்த போது, அவரது காரில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததால் மோட்டர் வாகன சட்டத்தின் கீழ் அவருக்கு ரூ.500 அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

236 பயணிகள் சென்ற நேபாளம் - துருக்கி விமானத்தில் தீ? கொல்கத்தாவில் தரையிறக்கம்!

3 தேசிய சாதனைகள் படைத்த மணிப்பூர் வீராங்கனை மீராபாய் சானு!

மும்பை நெடுஞ்சாலையில் விபத்து : 24 மணிநேரமாகியும் நீடிக்கும் போக்குவரத்து நெரிசல்!

2026 யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு அறிவிப்பு வெளியானது!

சிவகார்த்திகேயன் பாடியுள்ள தாய் கிழவி பட முதல் பாடல்!

SCROLL FOR NEXT