தமிழ்நாடு

ஆளுநரிடம் இபிஎஸ் அளித்தது புளுகு மூட்டை: அமைச்சர் விமர்சனம்

DIN

ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து பொய்களின் மொத்த தொகுப்பை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார். 

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று (நவ.23) சந்தித்துப் பேசியதுடன், திமுக அரசின் மீது புகார் மனுவை ஆளுநரிடம் அளித்துள்ளார்.

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியாக பராமரிக்கப்படாததால் தமிழக மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்றும், கோவை சிலிண்டர் வெடிப்பு உளவுத் துறையின் தோல்வி மட்டுமின்றி காவல்துறையின் அலட்சியத்தையும் காட்டுகிறது என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சென்னையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது,

ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி அளித்த புகார்கள் அனைத்தும் ஆதாரம் இல்லாதது; பொய்களின் தொகுப்பு. அதிமுகவில் நடக்கும் உட்கட்சி பூசலில் பாஜகவின் ஆதரவு பெற அக்கட்சி தலைவர்களை எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார். பாஜகவில் நடக்கும் உட்கட்சி பிரச்னையை திசை திருப்ப ஒரு கருவியாக மாறி எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்தித்திருக்கிறார் என விமர்சித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT