கோப்புப்படம் 
தமிழ்நாடு

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம்: நாளை முதல் வழங்கல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில்  உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு நாளை முதல் ரூ.1000 வழங்க அரசாணை வெளிடப்பட்டுள்ளது.

DIN

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில்  உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு நாளை முதல் ரூ.1000 வழங்க அரசாணை வெளிடப்பட்டுள்ளது.

சீர்காழியில் 99,518 குடும்ப அட்டைதாரர்களுக்கும், தரங்கம்பாடியில் 62,129 குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.1000 வழங்க அரசாணை வெளிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்ததன் காரணமாக கடும் வெள்ளம் ஏற்பட்டது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் அறிவிக்கும் வகையில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ரூ.1000 வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணமானது நாளை முதல் வழங்கப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

16 இடங்கள் முன்னேறி தனது உச்சத்தை அடைந்த ஜோஃப்ரா ஆர்ச்சர்!

வெள்ளத்தில் இந்தோனேசியா! இடிந்த மூன்று மாடி கட்டடம்!

ஆசியக் கோப்பைக்கான இலங்கை அணியில் மாற்றம்!

“இதற்கு மேலும் கூட்டணி வேண்டுமா?” செங்கோட்டையன் - அமித்ஷா சந்திப்பு குறித்து திருமா விமர்சனம்

காத்மாண்டு விமான நிலையம் மறுஅறிவிப்பின்றி மூடல்!

SCROLL FOR NEXT