முகப்பு
தமிழ்நாடு

குளிர்சாதன பெட்டியில் சடலத்தை வைக்க முயன்றவர் மின்சாரம் பாய்ந்து பலி

கூத்தூர் பகுதியில் குளிர்சாதன பெட்டியில் சடலத்தை வைக்க முயன்ற இளைஞர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 23 நவம்பர், 2022 at 11:23 AM
பகிர்:

மண்ணச்சநல்லூர்: கூத்தூர் பகுதியில் குளிர்சாதன பெட்டியில் சடலத்தை வைக்க முயன்ற இளைஞர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் கூத்தூர் ஊராட்சி குடிதெருவில் வசித்து வருபவர் அய்யப்பன் (22). இவரது வீட்டு அருகே நாகராஜ் என்பவர் நவ 22-ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

இந்நிலையில் அவரது உடலை குளிர்சாதன பெட்டியில் வைக்க அய்யப்பன் முயன்றுள்ளார். அப்பொழுது குளிர்சாதன பெட்டியின் பிளக்கை சுவிட்ச் போர்டில் வைத்து சுவிட்ச் ஆன் செய்துவிட்டு குளிர்சாதன பெட்டியினை இழுத்த போது மின்சாரம் பாய்ந்து அய்யப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Advertisement

இளைஞரின் உடலை கைப்பற்றிய கொள்ளிடம் காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.