தமிழ்நாடு

ராணிப்பேட்டையில் மாரத்தான் ஓட்டம்: அமைச்சர் ஆர்.காந்தி துவக்கி வைத்தார்

ராணிப்பேட்டை  மாவட்டத்தில் பொது சுகாதாரத் துறையின் நூற்றாண்டு விழாவையொட்டி, மராத்தான் ஓட்டப் பந்தயத்தை அமைச்சர் ஆர்.காந்தி ஞாயிற்றுக்கிழமை காலை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

DIN

ராணிப்பேட்டை  மாவட்டத்தில் பொது சுகாதாரத் துறையின் நூற்றாண்டு விழாவையொட்டி, பொது சுகாதாரத் துறையினர் பங்கு பெறும் மராத்தான் ஓட்டப் பந்தயத்தை அமைச்சர் ஆர்.காந்தி ஞாயிற்றுக்கிழமை காலை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ராணிப்பேட்டை மாவட்ட பொது சுகாதார துறையின் சார்பில், பொது சுகாதாரத் துறையினர் கலந்து கொண்ட மாரத்தான் ஓட்ட பந்தயம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை துவங்கியது. 

மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தார். தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்து கொண்டு ஓடினர். தொடர்ந்து முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிதீஷ் குமார் பதவியேற்பு விழாவில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு!

ரிமோட்டை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டனர்! யாரைச் சொல்கிறார் கமல்?

பாஜக - தவெக கூட்டணி உருவாகுமா? - நயினார் நாகேந்திரன் பதில்!

அனுமனைத் தவறாக பேசுவதா? ராஜமௌலி மீது புகார்!

பிகார் வெற்றிக்குக் காரணம் எஸ்ஐஆர்! நிதீஷைப்போல இபிஎஸ் முதல்வராவார்! - திண்டுக்கல் சீனிவாசன்

SCROLL FOR NEXT