தமிழ்நாடு

கொடிக்கம்பம் அமைக்க அதிமுகவினருக்கு அனுமதி மறுப்பால் பரபரப்பு!

DIN

விழுப்புரம்: விழுப்புரம் நான்கு முனை சந்திப்புப் பகுதியில் அதிமுகவினர் கொடிக்கம்பம் அமைக்க காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.

விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு பகுதியில் திமுக இளைஞரணிச் செயலரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, கடந்த 26 ஆம் தேதி கொடிக்கம்பத்துடன் கூடிய கல்வெட்டு திறக்கப்பட்டது. 

இந்நிலையில், இதன் அருகிலேயே அதிமுக சார்பில் பொன்விழா ஆண்டு நினைவுக் கல்வெட்டு அமைக்க செவ்வாய்க்கிழமை காலை அதிமுகவினர் பகுதியில் கூடினர். தொடர்ந்து அப்பகுதியில் கல்வெட்டு அமைக்க மண் தோண்டும் பணியை மேற்கொண்டனர். தகவலறிந்த விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தினர் அங்கு வந்து பணியை மேற்கொள்ளக் கூடாது எனக் கூறினர்.

திமுகவினர் கொடிக்கம்பம் அமைத்திருக்கும்போது நாங்கள் ஏன் அமைக்கக்கூடாது எனக் கேட்டு வாக்குவாதம் செய்தனர். கோட்டாட்சியர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு கண்டபிறகு பணிகளை மேற்கொள்ளலாம் என காவல்துறையினர் கூறினர்.

இதையடுத்து அதிமுகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து அதிமுக நகரச் செயலர்கள் ராமதாஸ், பசுபதி மற்றும் அதிமுகவினர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT