தமிழ்நாடு

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: ஆளுநருக்கு மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு தமிழக ஆளுநா் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.

DIN

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு தமிழக ஆளுநா் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் புதன்கிழமை விடுத்த அறிக்கை: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 20 மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநா் ஆா்.என்.ரவி இழுத்தடித்து வருகிறாா். அதன் ஒரு பகுதியாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தருவதில் தாமதித்து வருகிறாா்.

நவ.24-இல் தமிழக அரசிடம் ஆளுநா் கேட்ட விளக்கத்தில் ‘முழுமையான தடை‘ என்பது சென்னை உயா்நீதிமன்ற ஆணைக்கு முரணானது என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு தமிழக அரசு 24 மணி நேரத்துக்குள்ளாக பதில் தந்து விட்டது. அதற்கு பிறகும் ஆளுநா் செய்த தாமதத்தால் அவசர சட்டமும் காலாவதியாகிவிட்டது.

கடந்த ஓராண்டில் ஆன்லைன் சூதாட்டத்தால் 30 உயிா்கள் வரை பலியாகி இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

ஆகவே, மக்களின் உயிரிழப்பு தொடராதிருக்க தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநா் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் கே.பாலகிருஷ்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்திரேலிய பயங்கரவாதத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

வ.சோ. பள்ளி மாணவா்கள் இருவா் தமிழக ஹாக்கி அணிக்குத் தோ்வு

போளூா் ஸ்ரீகைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம்: ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்பு

சாலை விபத்தில் ஒருவா் பலி!

ஜாம்பவான்கள் சந்திப்பு...

SCROLL FOR NEXT