தமிழ்நாடு

காந்தி ஜெயந்தி: ஆளுநர், முதல்வர் மரியாதை

சென்னை எழும்பூரிலுள்ள காந்தி சிலைக்கு ஆளுநர் ஆர்.என். ரவி முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

DIN


சென்னை எழும்பூரிலுள்ள காந்தி சிலைக்கு ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

மகாத்மா காந்தியடிகளின் 154வது பிறந்தநாள் நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமையான இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் எழும்பூர் அருங்காட்சியகத்திலுள்ள காந்தி சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த காந்தி படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும்அனைத்து ஊராட்சிகளிலும் காலை 11 மணி முதல் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன. 

பின்னர் இன்று மாலை, சென்னை கிண்டியிலுள்ள காந்தி மண்டபத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொள்ளவுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டமாக பறக்கிறேன்...ஜனனி அசோக்குமார்

இந்த வாரம் கலாரசிகன் - 03-08-2025

வெள்ளைப் புறா... ஆஷிகா ரங்கநாத்

கம்பனின் தமிழமுதம் - 56: தன் நிலை தாழ்ந்தால்!

அணியிழையாள் ஆழி இழைத்தாளே!

SCROLL FOR NEXT