தமிழ்நாடு

புதுச்சேரி: எஸ்மா சட்டம் அமல்படுத்த அனுமதி கேட்பு

DIN

புதுச்சேரியில் எஸ்மா சட்டத்தை அமல்படுத்த அனுமதி கேட்டு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆவணங்கனை மாநில அரசு அனுப்பி வைத்தது. 

தனியாா்மயத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, புதுவை மின் ஊழியா்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனால், கோபமுற்றுள்ள பொதுமக்கள் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுவதால், போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதுச்சேரியில் மின் துறை ஊழியா்கள் போராட்டம் நடத்துவது மிகவும் தவறு. 

செயற்கையாக மின்வெட்டை ஏற்படுத்தும் ஊழியர்கள் கடுமையான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும். மேலும், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின் துறை ஊழியா்கள் பணிக்கு திரும்பாவிடில் எஸ்மா சட்டம் பாயும். எனவே, மின் துறை ஊழியா்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்பவ வேண்டும் என துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள்விடுத்திருந்தார். 

மேலும் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அரசு சார்பில் நடத்தப்பட்ட 2 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் புதுச்சேரியில் எஸ்மா சட்டத்தை அமல்படுத்த அனுமதி கேட்டு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆவணங்கனை மாநில அரசு அனுப்பி வைத்தது. எஸ்மா சட்டத்தை அமல்படுத்த ஆளுநர் தமிழிசை ஒப்புதலுடன் மத்திய அரசுக்கு ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

SCROLL FOR NEXT