தமிழ்நாடு

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி உற்சவ விழா: 108 வீணை இசை வழிபாடு!

உலகப்புகழ் பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நவராத்திரி உற்சவ விழாவில் விஜயதசமியை முன்னிட்டு 108 வீணை இசை வழிபாடு நடைபெற்றது . இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்

DIN

உலகப்புகழ் பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நவராத்திரி உற்சவ விழாவில் விஜயதசமியை முன்னிட்டு 108 வீணை இசை வழிபாடு நடைபெற்றது . இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சிறப்பித்தனர் . 

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நவராத்திரி உற்சவ விழா கடந்த 26 ஆம் தேதி தொடங்கியது . 

நவராத்திரியையொட்டி சுவாமி சன்னதி 2 ஆம் பிரகாரத்தில் கொலு அரங்குகள் அமைக்கப்பட்டு அங்கு மீனாட்சி அம்மன் தினசரி பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தார். 

இந்நிலையில், நவராத்திரி உற்சவத்தின் நிறைவு விழாவான விஜயதசமியை முன்னிட்டு வீணை வழிபாட்டு மன்றத்தின் சார்பில் 108 வீணை இசை வழிபாடு நடைபெற்றது . 

இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் வந்திருந்த இசைகலைஞர்கள் பங்கேற்று பல்வேறு பக்தி பாடல்களை இசைத்து சரஸ்வதிக்கு வழிபாடு நடத்தினர் . 

மாணவ-மாணவியர்களின் கல்வி மேம்பாட்டுக்காக நடத்தப்பட்ட இந்த வீணை இசை வழிபாட்டில்  பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர்கள் பங்கேற்று வீணை இசை வழிபாடு நடத்தினர். 

இசை வழிபாட்டு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சிறப்பித்தனர் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடியின் உரை இந்தியாவின் தாா்மிக நிலையைக் குறைத்துவிட்டது: காங்கிரஸ் விமா்சனம்

ஒரு லட்சத்துக்கும்மேல் வருவாய் ஈட்டிய ஓட்டுநா், நடத்துநா்களுக்குப் பரிசு வழங்கல்!

அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்ற பெண் உயிரிழப்பு

கோட்டக்குப்பம் அருகே இரு வீடுகளில் 12 பவுன் நகை திருட்டு!

மேல்மலையனூா் ஒன்றியத்தில் ரூ.1.69 கோடியில் கட்டப்பட்ட அரசு கட்டடங்கள் திறப்பு!

SCROLL FOR NEXT