தமிழ்நாடு

3 சிறுவர்கள் உயிரிழப்பு: திருப்பூர் காப்பகம் மூடப்படுகிறது

திருப்பூரில் 3 சிறுவர்கள் உயிரிழந்த காப்பகம் மூடப்படுவதாக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

DIN

திருப்பூரில் 3 சிறுவர்கள் உயிரிழந்த காப்பகம் மூடப்படுவதாக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் சிறுவர்கள் உயிரிழந்த காப்பகத்தில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்பு செய்தியாளர்களிடம் சந்தித்து தெரிவித்ததாவது:

திருப்பூர் சிறுவர்கள் உயிரிழந்த காப்பகம் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. சிறுவர்கள் பாதுகாப்பு காப்பாளர் யாரும் இல்லாமல் இருந்துள்ளனர். மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மீதும், காப்பக நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கெட்டுப்போண உணவை தந்ததால், 3 சிறுவர்கள் உயிரிழந்த காப்பகம் மூடப்படுகிறது. காப்பக நிர்வாக செயல்பாடுகள் அலட்சியமாக இருந்தது. காப்பக நிர்வாகத்தின் அஜாக்கிரதையாலும், மெத்தன போக்காலும் 3 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். இறந்த சிறுவர்கள் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் அளிக்கப்படும்.

திருப்பூர் சிறார் காப்பகத்தில் உள்ள சிறுவர்கள், அரசு காப்பகத்திற்கு மாற்றப்படுவார்கள் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

லடாக் செல்கிறது எதிா்க்கட்சிக் குழு?

அமைதி திரும்புமா காஸாவில்?

இந்திய வீடுகளில் ரூ.337 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள்

SCROLL FOR NEXT