முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 12,689 கன அடியாக சரிந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:31 AM
கோப்புப்படம்
பகிர்:


மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 12,689 கன அடியாக சரிந்துள்ளது.

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளிலும், மேட்டூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் மழை  தணிந்ததால் ஞாயிற்றுக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 13,588 கன அடியிலிருந்து வினாடிக்கு 12,689  கன அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 13,000 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.73 அடியாகவும், நீர் இருப்பு 91.45 டி.எம்.சியாகவும் உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →