முகப்பு
தமிழ்நாடு

திருச்சி ஒருங்கிணைந்த பேருந்து நிலையப் பணிகள் எப்போது நிறைவடையும்? கே.என். நேரு விளக்கம்

திருச்சி பஞ்சப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று அடிக்கல் நாட்டினார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:32 AM
கோப்பு படம்
பகிர்:

திருச்சி: திருச்சி பஞ்சப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினார்.

ரூ.350 கோடி செலவில் கட்டப்படும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில், பஸ் டெர்மினஸ், டிரக் டெர்மினல், மல்டி யுடிலிட்டி சென்டர் மற்றும் சாலைகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளுக்கு தனியாக இடம் ஒதுக்கப்படும்.

திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்ட மக்கள் சார்பில், ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பணிகள் இன்னும் 12 மாதங்களில் முடித்து விடுவோம் என்றார்.

திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சப்பூரில், திருச்சி மாநகராட்சிக்கு செந்தமான 500 ஏக்கர் நிலத்தில் 75 ஏக்கர் நிலத்தை பயன்படுத்திக் கொள்ளப்படும். 

ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் மொபசல், சிட்டி மற்றும் ஆம்னி பஸ் ஆகியவற்றை நிறுத்த 404 பேக்கள் அமைக்கப்படும் என்றார். ஒரே நேரத்தில் 360 டிரக்குகளை நிறுத்தும் வகையில் வடிவமைக்கப்படும் இந்த பேருந்து முனையம் எதிர்கால விரிவாக்கத்திற்கு போதுமான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

திருச்சியில் சுமார் ரூ.2,000 கோடி செலவில் மேம்பாலங்கள் மற்றும் புறவழிச்சாலைகள் அமைக்க ஆலோசனைகள் இருப்பதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →