தமிழகத்தில் சமூக நல்லிணக்க மனித சங்கிலிப் போராட்டம்
தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க காங்கிரஸ், மதிமுக, விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க மதிமுக, விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மதத்தின் அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி, அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் பிரிவினைவாதிகளை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று மக்களிடையே தொடர்ந்து பரப்புரை மேற்கொள்ளவும், சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவும் 17 கட்சிகள், 44 இயக்கங்கள் இன்று மனித சங்கிலிப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க | முலாயம் சிங் யாதவின் உடல் தகனம்!
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இந்த மனித சங்கிலிப் போராட்டம் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது.
சென்னையில் நடக்கும் போராட்டத்தில், மதிமுகவின் வைகோ, விசிக திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கே.பாலகிருஷ்ணன், திக கி.வீரமணி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
சென்னையில் அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலையிலிருந்து ஆயிரம் விளக்கு மசூதி வரை அனைத்து கட்சிகளின் தொண்டர்களும் கைகோர்த்து போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.