முகப்பு
தமிழ்நாடு

கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்தார் அமைச்சர்!

தூத்துக்குடி மேல் தட்டப்பாறை பகுதியில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாமை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் இன்று காலை தொடங்கி வைத்தார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:33 AM
பகிர்:

தூத்துக்குடி மேல் தட்டப்பாறை பகுதியில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாமை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் இன்று காலை தொடங்கி வைத்தார்.

கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மேலதட்டப்பாறையில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் தொடக்க நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், தலைமை வகித்தார். இம்முகாமினை மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.  

ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சி.சண்முகையா முன்னிலை வகித்தார். முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், செயற்கை கருவூட்டல், குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை, மலடு நீங்க சிகிச்சை உள்ளிட்டவை நடைபெற்றன. சிறப்பு கால்நடை மருத்துவர்கள் பங்கேற்று கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். 

இதில் திருநெல்வேலி கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் (பொறுப்பு) எட்வின், தூத்துக்குடி கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் சீ.ராஜன், உதவி இயக்குநர் ஜோசப் ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.