தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

DIN


மேட்டூர்: காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 45,000 கன அடியாக நீடிக்கிறது.  அணை நிரம்பிய நிலையில் ஆணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

நீர்மின் நிலையங்கள் மற்றும் சுரங்க மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21,500 கன அடி நீரும், உபரி நீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 23,500 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது. 

காவிரியை நீர் பிடிப்புப் பகுதிகளிலும் அதன் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீர் பிடிப்புப் பகுதிகளிலும் திடீர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மேலும் நீர் வரத்து அதிகரிக்கும். இதனால் மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள வெள்ள கட்டுப்பாட்டு அறையில் நீர்வளத்துறை அதிகாரிகள் முகாமிட்டு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்: வேலூர் கடைசி இடம்!

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: நாமக்கலில் 93.51% தேர்ச்சி!

செங்கல்பட்டு உள்பட 4 மாவட்டங்களில் மதியம் ஒரு மணிக்குள் கனமழை!

சுவாரஸ்யமான கதை! ஆனால்.. ரசவாதி - திரை விமர்சனம்!

சுயமரியாதைக்காக விளையாட விரும்பினோம்: விராட் கோலி!

SCROLL FOR NEXT