தமிழ்நாடு

ஈரப்பத நெல் கொள்முதல்: தமிழகம் வருகிறது மத்தியக்குழு!

DIN

நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை அதிகரிப்பது தொடர்பாக ஆய்வு செய்ய மத்தியக் குழு தமிழகம் வரவுள்ளது. 

மத்திய அரசின் உணவுக் கழகம் சார்பில் தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்கிறது. 

இதில் 19% ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்தது. ஆனால், டெல்டா மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக தற்போது நெல் ஈரப்பதம் அதிகம் இருக்கும் என்றும் ஈர்ப்பத அளவை உயர்த்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். 

இந்நிலையில், நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 22% ஆக உயர்த்த தமிழக அரசு சார்பில் உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மத்திய அரசிடம் கோரியிருந்தார். 

இதைத் தொடர்ந்து நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை அதிகரிப்பது தொடர்பாக மத்தியக் குழு தமிழகம் வந்து ஆய்வு செய்யவுள்ளது. ஆய்வு செய்யும் தேதி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT