தமிழ்நாடு

அடுத்து..சென்னை - மைசூரு இடையே 'வந்தே பாரத்' ரயில்! எப்போது தெரியுமா?

நாட்டின் 5-வது வந்தே பாரத் ரயில் சென்னை - மைசூரு இடையே வருகிற நவம்பர் 10 ஆம் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

நாட்டின் 5-வது வந்தே பாரத் ரயில் சென்னை - மைசூரு இடையே வருகிற நவம்பர் 10 ஆம் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத் விரைவு ரயில் சுமாா் 160 கி.மீ. வேகத்தில் பயணிக்க கூடியது. இந்த ரயில் சேவை கடந்த 2019-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

ஏற்கெனவே 3 வந்தே பாரத் ரயில்களின் சேவை தொடங்கிவைக்கப்பட்டுள்ள நிலையில், ஹிமாச்சல பிரதேச மாநிலம் உனா ரயில் நிலையத்தில் இருந்து தில்லி செல்லும் 4-ஆவது வந்தே பாரத் ரயில் சேவையை கடந்த வியாழக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடக்கிவைத்தார். 

இதையடுத்து, நாட்டின் 5-வது வந்தே பாரத் ரயில் சென்னை - மைசூரு இடையே வருகிற நவம்பர் 10 ஆம் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்கவிருக்கிறார். 

சென்னையிலிருந்து புறப்படும் இந்த ரயில் பெங்களூரு வழியாக மைசூரு சென்றடையும். இதன் மூலமாக, சென்னையில் முதல்முறையாக வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெயிலர் - 2 படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு!

இந்தியா கூட்டணி வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!

தில்லி பயங்கரம்! ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை! இளைய மகனைத் தேடும் போலீஸ்

“தலைவர பக்கத்துல பாக்கதான் வந்துருக்கோம்!” தவெக தொண்டர்கள் பேட்டி! | Madurai | Vijay

தில்லியில் 6 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: நான்கு நாட்களில் மூன்றாவது சம்பவம்!

SCROLL FOR NEXT