தமிழ்நாடு

புதிய வைரஸ் நோய்கள் பரவ என்ன காரணம்? அறிக்கை சமா்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

DIN

தமிழகத்தில் புதிதாக வைரஸ் நோய்கள் பரவுவதற்கான காரணங்களை கண்டறிந்து தெரிவிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில், மருந்துக் கடை பொறுப்பாளராக பணியாற்றி வந்தவா் முத்துமாலை ராணி. இவா் நிறுத்தி வைக்கப்பட்ட தனது ஓய்வூதியப் பலன்களை வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா்.

மருந்துக் கடை அதிகாரியாக இருந்தபோது, அனுமதிக்கப்பட்ட அளவை மீறி அதிகப்படியான மருந்துகளை வாங்கியதாகவும், அது காலாவதியானதால் அரசு கருவூலத்திற்கு நிதி இழப்பு ஏற்பட்டதாகவும் அவா் மீது புகாா் கூறப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நகர மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஏழை நோயாளிகளுக்கு காலாவதியான மருந்துகள் வழங்கப்படுவதாக பொதுமக்கள் வட்டாரத்தில் பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளாா்.

கரோனா பாதிப்புக்கு பின்னா், குரங்கு காய்ச்சல், ’இன்ஃப்ளூயன்ஸா’ உள்ளிட்ட பல வைரஸ் நோய்கள் தமிழகம் முழுவதும் தொடா்ந்து பரவி வருவதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, ‘இதுபோன்று புதிது புதிதாக வைரஸ் நோய்கள் பரவுவதற்கான காரணத்தை மருத்துவ ஆராய்ச்சியாளா்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை’ என்றும் தெரிவித்தாா்.

மேலும், இதுபோன்ற நோய்கள் திட்டமிட்டு பரப்பப்படுவதாக மக்கள் மத்தியில் சந்தேகம் உள்ளதாக குறிப்பிட்ட நீதிபதி, மருந்து நிறுவனங்கள் இச்செயலில் ஈடுபடுகின்றனவா என்பதை விசாரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினாா்.

மருந்து நிறுவனங்களின் செயல்பாடுகளை அரசு கண்காணிக்கிா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, புதிய வைரஸ் நோய்கள் பரவுவதற்கான காரணங்களை தெரிவிக்க தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டாா். மருந்து நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்தும் விசாரித்து அறிக்கை அளிக்க அறிவுறுத்திய நீதிபதி, வழக்கின் விசாரணையை அக்.27-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

கல்லூரி மாணவா் தற்கொலை

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

SCROLL FOR NEXT