முகப்பு
தமிழ்நாடு

கோடியக்கரை அருகே தரங்கம்பாடி மீனவர்கள் மீது தாக்குதல்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் இலங்கை மீனவர்கள் தாக்குதலில் காயமுற்ற தமிழக மீனவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

தரங்கம்பாடி: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் இலங்கை மீனவர்கள் தாக்குதலில் காயமுற்ற தமிழக மீனவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தரங்கம்பாடி அருகே பெருமாள்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த பூவரசனுக்குச் சொந்தமான திலகவதி என்ற ஒரு பைபர் படகில் பூவரசன்(25), தென்னரசன்(30), ஆறுமுகம்(60, நிவாஸ்(24), சந்திரபாடியை சேர்ந்த அருள்ராஜ்(34), சரத்(32) ஆகிய 6 பேர் கடந்த 12 ஆம் தேதி மீன்பிடித் தொழிலுக்குச் சென்றனர். 

இவர்கள் கோடியக்கரையில் இருந்து 20 நாட்டிகல் மைலில்  வடகிழக்கில்  தமிழக எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். வெள்ளிக்கிழமை  இரவு சுமார் 10 மணி அளவில் நான்கு படகுகளில் இலங்கையில் இருந்து வந்த மீனவர்கள், பூவரசன் படகு மீது மோதி வலை மீன்களை அள்ளிச் சென்றதுடன் கற்கள், கம்பு, சுலுக்கி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி காயப்படுத்தியுள்ளனர். 

இந்த திடீர் தாக்குதலால் காயம்பட்ட மீனவர்கள் தரங்கம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

இச்சம்பவம் குறித்து தரங்கம்பாடி கடலோர காவல் நிலையம் மற்றும் பொறையார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →