முகப்பு
தமிழ்நாடு

ரத்தினகிரி: இருசக்கர வாகன விபத்தில்  2 பேர் பலி

ரத்தினகிரி அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் பலியானார்கள். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:35 AM
பகிர்:


ராணிப்பேட்டை: ரத்தினகிரி அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் பலியானார்கள். 

ராணிப்பேட்டை மாவட்டம்  ஆற்காடு அடுத்த தாழனூர் ஊராட்சி ராமநாதபுரம் மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டுரங்கன் (வயது 55). இவர் ஊராட்சி குடிநீர் பம்ப் ஆபரேட்டராக வேலைசெய்து வருகிறார். திமுக பிரமுகரான  இவர் சனிக்கிழமை இரவு  மோட்டார் சைக்கிளில் வேலூரில் இருந்து வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது, ஆற்காடு அருகே ரத்தனகிரி அடுத்த நந்தியாலம் ஊராட்சி பூஞ்சோலை நகர் சோலையபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில்  செல்லும் போது போது பின்னால் வந்த  வேலூர் மாவட்டம் லத்தேரி முத்தியால்பேட்டை ரங்கன் கேட் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (32) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பாண்டுரங்கன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள்மீது மோதியது.

இதில், படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே  பலியானார்கள். இதுகுறித்த புகாரின் பேரில் ரத்தினகிரி போலீஸார் வழக்குப்பதிந்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →