முகப்பு
தமிழ்நாடு

தில்லியில் 11 எலக்ட்ரிக் சார்ஜிங் நிலையங்களை திறந்துவைத்தார் கேஜரிவால்!

தேசிய தலைநகரில் அடுத்த 2 மாதங்களில் 100 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:36 AM
பகிர்:

தலைநகர் தில்லியில் 11 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று திறந்துவைத்தார்.

திறந்துவைத்து அவர் பேசுகையில், 

தேசிய தலைநகரில் அடுத்த 2 மாதங்களில் 100 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும். முன்னதாக இன்று 11 சார்ஜிங் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதில் பேட்டரி மாற்றும் வசதிகளும் அடங்கும் என்றார்.

முன்னதாக பேட்டரி மாற்றும் இடங்களும், மின்சார வாகனங்கள் சார்ஜிங் செய்யப்படும் நிலையங்களும் தனித்தனியாக இருந்தன. தற்போது இவை ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. தற்போது திறக்கப்பட்டுள்ள 11 சார்ஜிங் நிலையங்களில், 73 சார்ஜிங் பயின்ட்கள் உள்ளன. 

ஆகஸ்ட் 2020இல் அறிமுகப்படுத்தப்பட்ட லட்சிய மின்சார வாகனக் கொள்கை 2024ஆம் ஆண்டுக்குள் மின்சார வாகனங்களின் பங்கை மொத்த விற்பனையில் 25 சதவீதமாக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார். 

முழு கட்டுரையைப் படிக்க →