முகப்பு
தமிழ்நாடு

உத்தரகண்ட் ஹெலிகாப்டர் விபத்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

உத்தரகண்ட்டில் பக்தர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் சென்னையைச் சேர்ந்த 3 பேர் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:36 AM
மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
பகிர்:

உத்தரகண்ட்டில் பக்தர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் சென்னையைச் சேர்ந்த 3 பேர் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.  

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர்கள் உயிரிழந்தனர். 

இதில், தமிழ்நாட்டை கலா, ரமேஷ், பிரேம்குமார் வாஞ்சிநாதன், சுஜாதா பிரேம்குமார் ஆகிய மூவரும் கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய இடங்களுக்கு புனித யாத்திரை சென்றபோது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்.

உயிரிழந்தவர்களின் உடல்களை சென்னைக்கு கொண்டுவர நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசு, உத்தரகண்ட் அரசுடன் இணைத்து மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →