தமிழ்நாடு

பாம்பன் பாலத்தில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 15 பேர் காயம்

DIN

ராமநாதபுரம்: ராமேசுவரம் பாம்பன் பாலத்தில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஓட்டுநர்கள் உள்பட 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

பாம்பன் பாலத்தில் வியாழக்கிழமை அதிகாலை ராமேசுவரத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கி சென்றுகொண்டிருந்த அரசு பேருந்தும், திருச்சியில் இருந்து ராமேசுவரம் நோக்கி வந்துகொண்டிருந்த போருந்தும் ஓட்டுநர்களின் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், இரண்டு பேருந்துகளின்  இருந்த பயணிகள், ஓட்டுநர்களும், 15க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். 

காயமடைந்த அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு ராமேசுவரம் அரசு மருத்துவமனை, உச்சுப்புளி ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

வியாழக்கிழமை அதிகாலை பெய்த மழை பெய்து பாலத்தில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்ததால் பேருந்துகள் ஓட்டுநரின் கட்டுப்பைட்டை இழந்து இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

SCROLL FOR NEXT