கோப்புப்படம் 
தமிழ்நாடு

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது!

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

DIN

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இது புதிய புயல் சின்னமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தெற்கு அந்தமான பகுதியில் உருவான வளிமண்ட சுழற்சி காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்து மேற்கு, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து நாளை மறுநாள் (அக்.22) தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும்.

காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் மண்டலமாக வலுவடைந்து புயலாக மாறி வங்கக் கடலில் மத்திய, மேற்கு பகுதியில் நிலை கொள்ளும். 

இதனால் தமிழகத்தில் நான்கு நாள்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

அதனைத் தொடர்ந்து 48 மணி நேரத்தில் மத்திய மேற்கு வங்கக் கடலில் புதிய புயல் சின்னமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கல்பட்டில் தசரா திருவிழா!

அடுத்த 2 மணிநேரம் சென்னை, புறநகரில் மழை!

மாணவ, மாணவிகளுக்கு எழுதுபொருள்கள் அளிப்பு

நாட்டு நலப் பணி திட்ட சிறப்பு முகாம் நிறைவு

நெமிலி பாலா பீடத்தில் நவராத்திரி இன்னிசை விழா நிறைவு

SCROLL FOR NEXT